ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனின் பங்கேற்பு அவசியம் என வலியுறுத்தல்

ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனின் பங்கேற்பு அவசியம் என வலியுறுத்தல்

ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளன.

ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனின் பங்கேற்பு அவசியம் என ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்கு முன்னதாக பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன், போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இடையே அலஸ்காவில அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களிலும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் அக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், உக்ரைனின் பங்கேற்பு இன்றியமையாதது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Share This