தெய்வேந்திரமுனை பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை – இருவர் கைது

தெய்வேந்திரமுனை பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை – இருவர் கைது

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள வீதியில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (07) கந்தர பொலிஸ் நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன் முன்னிலையான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய கந்தர மற்றும் தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி, தேவுந்தர தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலுக்கு முன்னால் உள்ள சிங்கசன வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர், வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், ஹிக்கடுவ பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடைக் கடைக்கு அருகில் நின்ற ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிமெல்லகமஹா பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கோனபினுவல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி இரவு, ஹிக்கடுவ பொலலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகந்த பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் உள்ள ஆடைக் கடை அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இருவரும் படுகாயமடைந்து கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்தார்.

Share This