
கொழும்பில் 1500 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
கொழும்பு அளுத்கடை பகுதியில் சுமார் 1560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இருவரை பொலிஸார் விசாரித்துள்ளனர்.
இதன் விளைவாக சட்டவிரோத விற்பனைக்கான நோக்கம் கொண்ட சுமார் 1,560 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்போது கைதான சந்தேகநபர்கள் கொழும்பை சேர்ந்த 34 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
