மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share This