ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அக்குரெஸ்ஸவின் கானத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி இந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This