சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் இருவர் கைது

போலி இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபிக்குப் புறப்படவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறுவதற்காக கைது செய்யப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

பயணிகள் முனையத்தில் அவர்கள் காத்திருந்தபோது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளின் சோதனையின் போது அவர்களிடம் இரண்டு போலி இந்திய கடவுச்சீட்டுகள் மற்றும் இரண்டு போலி இத்தாலிய விசாக்கள் மீட்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This