பிக்குனியை அச்சுறுத்திய இருவர் கைது

பிக்குனியை அச்சுறுத்திய இருவர் கைது

வத்தளை கெரவலப்பிட்டி பகுதியில் பௌத்த பிக்குனி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள மடாலயத்தில் நடந்த புனித விழாவிற்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதற்காக இரண்டு நபர்கள் துறவியை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தினர்.

இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

முடிந்தால், பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்யுமாறும் தங்களுக்கு பொலிஸில் நண்பர்கள் இருப்பதாகவும் சந்தேகநபர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

மிகவும் மோசமான நடத்தையைக் காட்டும் இந்த இரண்டு நபர்களும், பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வத்தளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (03) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

Share This