டிரம்ப் தீர்க்கமான தலையீடு!! ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீர்க்கமான தலையீடு மீண்டும் தொடங்கியுள்ளது.
பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் அடுத்த வாரம் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதே விட்காஃப்பின் நோக்கமாகும்.
எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை விட்காஃப் ரஷ்யாவிற்கு விஜயம் செய்வார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
மக்கள் இறப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்றும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனுடன் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாகவும் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
ரஷ்யா அருகே இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், கப்பல்கள் எந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை டிரம்ப் வெளியிடவில்லை.
சோச்சியின் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலே காரணம் என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் சோச்சிக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், தெற்கு உக்ரைன் நகரமான மைக்கோலைவில் உள்ள வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பை ரஷ்யா ஏவுகணை மற்றும் ஷெல் தாக்குதல்களால் அழித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரத்தில் ரஷ்ய இராணுவம் மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதல் நடத்தியதில் ஏழு பொதுமக்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.