ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு விஜயம்

ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு அவர் முதலில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பயணம் ஏப்ரல் அல்லது மே மாத்தில் மேற்கொள்ளலாம் என ட்ரம்ப் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக 02 ஆவது முறை பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அவருடைய முதல் பதவி காலத்தின்போது, அமெரிக்காவில் 45,000 கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

இந்த முறை அமெரிக்க நிறுவனங்களில் 01 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்படும் என சவுதி அரேபியா உறுதியளித்துள்ள நிலையில்
அந்நாட்டுக்கு அவர் முதலாவதாக பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This