கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்

கனடாவுக்கான வரியை உயர்த்தினார் டிரம்ப்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கனடாவுக்கு விதிக்கப்படும் வரி வீதத்தை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

இந்த புதிய வரி விதிப்புகள் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பல நாடுகளுக்கும் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை ஏழு நாட்களுக்குள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. முன்னதாக, ஏனைய நாடுகள் ஒகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற முயற்சித்திருந்தன.

இதனால், மெக்சிகோவுக்கு திட்டமிட்டிருந்த கூடுதல் 90 நாட்கள் வரிவிதிப்பை டிரம்ப் தற்காலிகமாக இடைநிறுத்தினார்.

ஏப்ரல் மாதம், டிரம்ப் தனது கட்டணத் திட்டத்தை முதன்முறையாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வாய்ப்பு தரும் நோக்கில், அவர் அந்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சில நாடுகள், அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளன . இந்நிலையில் ஏனைய நாடுகள் குறித்து விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Share This