மரகுற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் மரக்குற்றில்களை ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 11.11.2025 செவ்வாய்கிழமை காலை 10.45 மணியவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரத்தென்ன பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு மரக்குற்றிகளை ஏற்றி சென்ற பார ஊர்தி பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பெற்றோசோ பகுதியில் வளைவு பகுதியில் பார ஊர்தியின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த டயர் கீழ் இறங்கியதன் காரணமாக விபத்து இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது பார ஊர்தியில் சாரதி மாத்திரம் இருந்ததாகவும் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
