ஒடிசாவில் பாரிய நிலநடுக்கம்

ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6:10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கொல்கத்தாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி வங்காள விரிகுடாவில், 19.52°வடக்கு அட்சரேகை மற்றும் 88.55°கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்தது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 91 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.