அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக மோதல்!! ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களை எதிர்கொள்ள, ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
மூன்று மாதங்களுக்கு வர்த்தக போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் தற்போது நடைமுறையில் உள்ள அதிக வரிகளைத் தற்காலிகமாக நீக்குவதுமே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்ஜிங் மற்றும் வொஷிங்டன் இடையே ஆரம்ப ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதையடுத்து, வாரந்தோறும் அதிகரித்து வரும் வரிகள் மற்றும் வர்த்தகம் போன்ற விவாதங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், சீனாவுடன் நீடித்த வரி ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் தீவிரமாக செயற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா, வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய காலவகாசம் ஒகஸ்ட் 12 ஆம் திகதி ஆகும்