மெல்ல மெல்ல இஸ்ரேல் நகரமாக மாறும் அறுகம்பே குடா – சுற்றுலா பயணி கவலை

மெல்ல மெல்ல இஸ்ரேல் நகரமாக மாறும் அறுகம்பே குடா – சுற்றுலா பயணி கவலை

இலங்கையின் அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் வணிகங்களின் அதிகரித்து வரும் இருப்பு குறித்து டிஜே டாம் மோனகிள் என்ற சுற்றுலாப் பயணி கவலைகளை எழுப்பியுள்ளார்.

“அறுகம் விரிகுடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.

50,000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு அறுகம் விரிகுடா வாக்குறுதி அளிக்கப்பட்டதா?” என்று அவர் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட கணொளியில் கூறினார்.

அப்பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட டாம் மோனகிள், பல இடங்களில் சிங்களம் அல்லது தமிழுக்குப் பதிலாக ஹீப்ரு மொழி பயன்படுத்தப்படுவதையும், சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் கூட காட்டப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

“அங்கே ஹீப்ரு மாதிரி தோற்றமளிக்கும் உணவுப் பொருள் பட்டியல் இருக்னிற்து. அதில் அதிகமா ஹீப்ரு இருக்கின்றது.

சிங்களவர்களோ அல்லது தமிழர்களையோ பார்ப்பதை விட இங்கே நிறைய ஹீப்ரு இருக்கு. நாம் இலங்கையில் தான் இருக்கோமா?” என்று கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலியர்கள் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து நிகழ்வுகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது என்றும் டாம் மோனகிள் வெளிப்படுத்தினார்.

டாம் மோனகிள் அறுகம்பேயின் நிலைமையை கண்டுகொள்ளாமல் இருப்பதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தினார்.

Share This