
யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்
அரச வங்கிகளில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக நேற்று இரவு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களின் மூலம் வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதற்கான முயற்சிகளுக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
CATEGORIES இலங்கை
