அமரர்.சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது பிறந்த தினம் இன்று

மலையகத்தின் பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
1913 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார்.
முக்கிய பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதுடன் இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார்.