எம்.ஜி.ஆரின் 108 ஆவது ஜனன தினம் இன்று
மறைந்த நடிகரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்த தினம் இன்று.
இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பாக கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர்.
மக்களுக்காக எம்.ஜி.ஆர் மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டோம் என்று அதில் கூறியுள்ளார்.