முன்னாள் மோட்டார் வாகன ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

முன்னாள் மோட்டார் வாகன ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாக
பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்க தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்தமை தொடர்பான சந்தேகத்தின்
பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக 177 வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, சட்டத்திற்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளமை
விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

 

 

Share This