யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி உட்பட மூவர் கைது

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் ஒன்பது கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைபொருட்களுடன் 25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் அடங்கலாக மூவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த மூவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This