முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மூன்று மாதகால அவகாசம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மூன்று மாதகால அவகாசம்

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்று (15) அனைத்து இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அதன்படி, 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 22/40/37 இலக்க வர்த்தமானி மூலம் முச்சக்கர வண்டிகளில் மேலதிக பாகங்களை பொருத்தக்கூடிய சட்டக் கட்டமைப்பு மற்றும் வரம்புகள் பற்றியும், அதற்கிணங்க முச்சக்கர வண்டிகளில் சட்டபூர்வமாக பொருத்தப்பட்ட பாகங்கள் அகற்றப்பட மாட்டாது என்றும், அவ்வாறில்லாத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி, 3 மாத கால அவகாசத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளை அறிவுறுத்தி, சட்டவிரோதமாக பொறுத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அகற்றுவதற்கான நடவடிக்​கையை எடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

Share This