அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூவருக்கு அபராதம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூவருக்கு அபராதம்!

அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜா-எல மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்களே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, ஒரு கிலோ அரிசியை முறையே 308, 275 மற்றும் 280 ரூபாய் ஆகிய அதிக விலைகளில் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, வர்த்தகர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )