மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

வத்தளை பொலிஸ் பிரிவின் பள்ளியவத்த பகுதியில் சுமார் 35 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்லது ‘தேசிய நடவடிக்கை’யின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நேற்று (30) மாலை நடத்தப்பட்ட இந்த சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் 25, 21 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் கை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது, ​​சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிலோகிராம் 165 கிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (31) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This