50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது
இலங்கைக்கு 50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Flydubai FZ-569 என்ற விமானத்தில் இன்று பிற்பகல் துபாயிலிருந்து வருகைத்தந்த 38 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 309 கையடக்கத் தொலைபேசிகள், 12 மடிக்கணினிகள், 02 மேக்புக்ஸ், 08 ஐபேட்கள், 20 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், 05 ரவுட்டர்கள் மற்றும் ஏனைய பாகங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இலங்கையில் பொருட்களை விற்பனை செய்ய எதிர்பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.