
எரிபொருள் பதுக்கல்காரர்களுக்கு வலை: 1600 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீட்பு
நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் மீன்பிடி படகு ஒன்றில் 1,050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய நபரும், புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் 562 லீற்றர் டீசலை வைத்திருந்த 36 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், ஹிங்குராக்கொட பகுதியில் 1,995 லீற்றர் மண்ணெண்ணெயைச் சேமித்து வைத்திருந்த மற்றொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
