மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலுள்ள வாட்ஸ்அப் செயலியில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

இந்தத் தகவலால் மும்பையில் காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் முதல்வர் ஃபட்னாவிசுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசியில் இருந்து அந்தத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மிரட்டல் தகவலில் ‘மாலிக் ஷாபாஸ் ஹுமாயுன் ராஜ தேவ்’ என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மும்பை காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This