இணைய சேவையை அதிகப்படுத்த இந்த வீட்டுப்பொருளே போதுமானது

இணைய வேகம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசை. ஆனால், சில நேரங்களில் வீடுகளில் இணைய சேவை மிகவும் மெதுவாகத்தான் இயங்கும்.
ஆனால், ஒரு அலுமினிய ஃபோயில் உங்கள் இணையப் பிரச்சினையை தீர்க்கும் எனக் கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?
அதாவது, அலுமினிய பொயிலை நீங்கள் பயன்படுத்தும் ரௌட்டர் பக்கத்தில் வைப்பதன் மூலம் இணைய வேகத்தை அதிகப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
அதாவது, அலுமிகிய ஃபொயிலை குடை போன்ற வடிவத்தில் மடித்து ரௌட்டருக்கு பின்னால் வைக்க வேண்டும். ஆனால், ரௌட்டர் மற்றும் அலுமினிய ஃபொயில் இரண்டும் உரசக் கூடாது.
அடுத்ததாக ரௌட்டரின் பின்புறத்தை ஃபொயிலால் மூடுவதன் மூலம் சிக்னல் நன்றாக கிடைக்கிறது எனவும் கூறப்படுகிறது.
ரௌட்டரை சுவரின் மேற்புறம் அல்லது உயர்ந்த இடத்தில் வைப்பதனாலும் கண்ணாடி பொருட்கள் அல்லது சுவர்களுக்கு அருகில் வைப்பதன் மூலமும் சிக்னலை அதிகப்படுத்த முடியும்.