இப் பறவையின் கண்கள் அதன் மூளையை விடவும் பெரியதாம்…
இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரினமுமே ஏதோ ஒரு வகையில் ஒன்றை விட மற்றொன்று வித்தியாசமானது. அந்த வகையில் ஒரு பறவையின் கண்கள் அதன் மூளையை விடவும் பெரிதாக உள்ளது.
அந்த பறவை இனம்தான் ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கோழி. இவ் வகை நெருப்புக் கோழியின் மூளை 27 கிராம் தான் இருக்கும். ஆனால், அவற்றின் கண்கள் 5 சென்டிமீட்டர் வரையில் விட்டம் கொண்டது. இவை அவற்றின் மூளையை விடவும் பெரியது.
இந்த கண்கள் மூலம் நெருப்புக் கோழிகளால் மூன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள பொருட்களைக் கூட துல்லியமாகக் காண இயலும்.