ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை – இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்

ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை – இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்

தற்போதைய அரசாங்கதை தோற்கடித்து, ராஜபக்ச குடும்பத்தினரை அல்லது ரணிலை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை என இலங்கை தமிழசு கட்சி தெரிவித்துள்ளது.

அந்தக்  கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, மக்களின் பிரச்சிகைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் இதுவே எமது கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கு நேற்று மாலை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த 18 பில்லியன் டொலர்கள் உள்ளதாக சொன்னார்கள்.அவற்றில் ஒரு வீதத்தினை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தாலும் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் டினேஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சீலாமுனை பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தற்போது மழைகாலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share This