தெறி பட நடிகர் காலமானார்!

தெறி பட நடிகர் காலமானார்!

தனுஷின் புதுப்பேட்டை, விஜய்யின் தெறி, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் தெறி படத்தில் இடம்பெற்றிருந்த பாடசாலை காட்சியில் ட்விங்கிள் ட்விங்கிள் சூப்பர் ஸ்டார் என ரைம்ஸ் கூறி, அது பெரும் வைரலானது.

இந்நிலையில் மஞ்சள் காமாலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி அவரது 40 ஆவது வயதில் உயிரிழந்துள்ளமை திரைத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share This