
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு
எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.
இதன்படி, புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ் முதல் கப்பல் 2026 ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆகையினால், எரிவாயு பற்றாக்குறை இருக்காது என்று நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எரிவாயு வழங்குவதற்கான டெண்டர், முந்தைய ஓமானி நிறுவனத்திற்குப் பதிலாக ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ.க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் முதல் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வந்து சேரும். எனவே, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போல் எரிவாயு பற்றாக்குறை இருக்காது,” என்று அவர் கூறினார்.
