எதிர்வரும் ஆண்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும்

எதிர்வரும் ஆண்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஆண்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஆண்டு சுமார் 100 மில்லியன் தேங்காய்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3,000 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படும் நிலையில் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால், தேங்காய் துருவல் ஆகியவற்றை மறு ஏற்றுமதிக்காக மூன்று பிரிவுகளின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் நாட்டில் தேங்காய் உற்பத்தி 32.3 வீதம் கணிசமாகக் குறைந்து 167.8 மில்லியன் தேங்காய்களாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 2023ஆம் ஆண்டில் நாட்டின் தேங்காய் உற்பத்தி 3,168.1 மில்லியன் தேங்காய்களாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி 11.9 வீதம் குறைவடைந்து 2790.1 மில்லியன் தேங்காய்களாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஒரு தேங்காய் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தற்போது ஒரு தேங்காயின் விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This