சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது.

நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை கடைகளில் பச்சையரிசி தொட்டிகள் காலியாகக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

ஒரு சில கடைகளில் பச்சையரிசி காணப்பட்ட போதிலும், அந்த அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு கிலோ உள்ளூர் பச்சையரிசியின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் என்ற போதிலும் கடைகளில் 240 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரையில் ஒவ்வொரு விலைகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது எந்தவொரு நிலையிலும் அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன் பல்பொருள் அங்காடிகளில் பச்சையரிசி தொட்டிகளில் 220 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 240 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தற்போது அரிசி நெருக்கடியை தீர்க்க முடியாத வெறும் காகிதமாக மாறியுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.

மொத்த விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்படாத அரிசி வர்த்தமானி அறிவித்தலின் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் தற்போது உள்ளூர் பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி விற்பனையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான கையிருப்பு ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் காணப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபைக்கு குறித்த நெல் கையிருப்பை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அரசாங்கம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை கூறுவது பொய் எனவும் அவர் கூறினார்.

பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான நெல் கையிருப்பு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் இருப்பதாக அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் சொல்வது பொய் என்றும், அந்த நெல் கையிருப்பை அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

நுகர்வோரை தவறாக வழிநடத்தி அரிசி வர்த்தகர்கள் தேவையற்ற இலாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அரிசி நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கமும் நுகர்வோர் அதிகார சபையும் ஒழுங்காக ஈடுபடவில்லை எனவும் தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share This