உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் புகைப்படங்களை வெளியிட்டது வத்திகான்

உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் புகைப்படங்களை வெளியிட்டது வத்திகான்

உயிர் நீத்த திருத்தந்தை பிரான்சிஸின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திறந்த சவப் பேழையின் புகைப்படங்களை வத்திகான் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் உயிர் நீத்த வத்திக்கானில் உள்ள இல்லமான காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சர்சதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் திங்களன்று தனது 88வது வயதில் உயிர் நீத்தார். அவரது இறுதிச் சடங்குகள் இந்த வார இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் சுமார் 30 நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 23ஆம் திகதி சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தார்.

வைத்தியசாலையில் இருந்து திரும்பிய அவர் பொது மக்கள் முன்னிலையிலும் தோன்றியிருந்தார். பிரான்சிஸ் தனது போப்பாண்டவராக இருந்த காலத்தில் 45க்கும் மேற்பட்ட சர்வதேச பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

இதில் இலங்கை, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மியான்மர், வடக்கு மாசிடோனியா, பஹ்ரைன் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு போப் மேற்கொண்ட யணமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This