அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் இருந்த ‘கலாநிதி’ பட்டமும் நீக்கம்
நாடாளுமன்ற இணையத்தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என எழுதப்பட்டிருந்தமை தவறுலாக இடம்பெற்ற விடயம் என நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய திணைக்களம் கூறியுள்ளது.
அமைச்சர் நாடாளுமன்றத்தில் வழங்கிய தகவல் குறிப்பில் அவரது பெயருக்கு முன்பாக கலாநிதி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அவரின் பெயருக்கு முன்னால் கலாநிதி என குறிப்பிடப்பட்டமை உரிய தகவல்களை உள்ளீடு செய்வதில் விடுபட்ட தவறாகும் என்றும் நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடுபட்ட தவறை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து எம்.பி.க்களினதும் தகவல்கள் மீள மறுபரிசீலனை செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய திணைக்களம் கூறியுள்ளது.