ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது

கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்ததன் அடிப்படையில் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படினும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலையை 25 ரூபாவால் குறைக்கப்பட்டிருப்பின் நிச்சயமாக ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிக இலாபம் பெறும் இரண்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களால் 10 ரூபாவுக்கு மேலதிகமாக கோதுமை மாவின் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.