இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா
மக்களவை, மாநில சட்ட சபை, மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது.
இம் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் இன்று மக்களவையில் இம் மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அனைத்து மந்திரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.