டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This