அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்திலேயே இடம்பெறும்

அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் இறுதிப் போட்டிகளை நடத்தும் நாடாக இங்கிலாந்து பெயரிடப்பட்டுள்ளது.
2027 இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த எதிர்பார்க்கப்பட்ட பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சிங்கப்பூரில் கடந்த நான்கு நாட்கள் நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட்டை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்து வரும் மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளையும் இங்கிலாந்தில் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்துவதில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் வெற்றியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2023–2025 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி கடந்த மாதம் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது, இதில் தென்னாப்பிரிக்கா அவுஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.