வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆலயத்தில் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் ஏழாம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியும் நடைபெறும்.

அத்துடன் 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவு பெறும்.

இதேவேளை, நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதித் தடை ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி மூடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மாற்று வீதிகள் ஊடாகவே பயணிக்க முடியும் என யாழ் மாநகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும்.

நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This