லண்டன் நகரில் ஏற்பட போகும் மாற்றம்

லண்டன் நகரில் ஏற்பட போகும் மாற்றம்

லண்டன், டீசல் கார்கள் இல்லாத இங்கிலாந்தின் முதல் நகரமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நியூ ஆட்டோமோட்டிவ் (New AutoMotive) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையைத் தடை செய்ய இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், நியூ ஆட்டோமோட்டிவ் இந்த புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

தலைநகரான லண்டனில் செயல்பட்டு வரும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எரிபொருள் விற்பனையை முற்றிலும் நிறுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள சுமார் 8,400 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டுக்குள் கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் நியூ ஆட்டோமோட்டிவ் தமது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )