ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது

ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் செல்ல அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, வாக்குமூலம் அளிக்க 2025 ஒகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் அவர் ஒகஸ்ட் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான்நிலுபுலி லங்காபுர, ரணில் விக்ரமசிங்கவை தலா ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும் வழக்கை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

அன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் விசாரணைகளை முடிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )