தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை

தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை

தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் இன்று மாலை மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானதைத் தொடர்ந்து 33 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்காணோர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளையும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியதைத் தொடர்ந்து இருநாடுகளும் அமைதியை ஏற்படுத்த ஒப்புக்கொண்டன.

தாய்லாந்தை விட பலவீனமான இராணுவத்தைக் கொண்ட கம்போடியா, உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

எவ்வாறாயினும் எந்தவொரு போர்நிறுத்தத்திற்கும் முன்னர் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும் என தாய்லாந்து கூறியதைத் தொடர்ந்து மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Share This