பயங்கரவாத குற்றச்சாட்டு – அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்

பயங்கரவாத குற்றச்சாட்டு – அரசாங்கத்திடம் தீர்வு கோரும் உறவினர்கள்

இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் நேற்றைய தினம் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

கடந்த ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு சென்ற போது அவர்கள் அஹமதாபாத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கைதான ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. இவர்கள் பயங்கரவாதிகள் இல்லையென்பது தெரியும் என பாதுகாப்பு செயலாளர் ஊடகங்களுக்கும் அறிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டமை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் எதுவித தகவலும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி இந்த வாரம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்தோம். எங்களுக்கு குழந்தைகள் உள்ளன. ஆகவே அவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோருகிறோம்” என்றார்.

Share This