அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ;  கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ; கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்

அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.

திங்கட்கிழமை மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

டேனிஷ் துருப்புக்கள் ஆர்க்டிக் பிரதேசத்தில் தரையிறங்கியதாகவும், ஒபரேஷன் ஆர்க்டிக் எண்டியூரன்ஸ் என அழைக்கப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க முன்னர் அனுப்பப்பட்ட சுமார் 60 பேருடன் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை கட்டுப்படுத்த டென்மார்க் திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும், தீவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் எந்தவொரு நடவடிக்கையும் நேட்டோவின் முடிவுக்கு வழிவகுக்கும் என்றும் டென்மார்க் பலமுறை கூறியுள்ளது.

எவ்வாறாயினும், கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப் உறுதியாகவுள்ளார்.

டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்க-ஐரோப்பிய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்ளிட்ட 32 உறுப்பினர்களைக் கொண்ட அட்லாண்டிக் கடல்கடந்த பாதுகாப்பு கூட்டணியின் சாத்தியமான சிதைவு குறித்த அச்சங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )