கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்

கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், சேதமாக்கப்பட்ட பகுதிகள் மறுசீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரம்டன் நகரில் அண்மையில் தமிழின அழிப்பு நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This