Tag: news

மலேசியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

admin- May 12, 2025

ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மலேசியாவிலிருந்து 2,022 ... Read More

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு

admin- May 12, 2025

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது ... Read More

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு

admin- May 12, 2025

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் நிறைவடையவுள்ளது. இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ... Read More

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

admin- May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு ... Read More

இன்றும் நாளையும் சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு

admin- May 12, 2025

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், ... Read More

பஸ் விபத்துக்கான காரணம் ,சாரதியின் கவனயீனமா?

admin- May 11, 2025

ரம்பொட - கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் ... Read More

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

admin- May 11, 2025

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கிலோ மீற்றர் மேற்கே 89 கிலோ ... Read More

நடிகை சேமினி பிணையில் விடுவிப்பு

admin- May 11, 2025

நிதி மோசடி தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நடிகை சேமினி இத்தமல்கொட இன்று கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு ... Read More

பஸ் விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி இரங்கல்

admin- May 11, 2025

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரங்கல் ... Read More

ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை அறிவிப்பு

admin- May 11, 2025

ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூரில், இந்திய விமானப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் ... Read More

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்

admin- May 11, 2025

இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

admin- May 11, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். எமிரெட்ஸ் விமான ... Read More