யாழில் வாள்வெட்டு – பொலிஸார் மீதும் தாக்குதல்

யாழில் வாள்வெட்டு – பொலிஸார் மீதும் தாக்குதல்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள்வவெட்டு தாக்குதலுக்கு இலக்கான இருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபானசாலைக்குள் திடீரென புகுந்த இளைஞர் குழு இங்கிருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டுக்குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டனர்.

எவ்வாறாயினும், ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், தப்பிச்சென்ற ஏனையவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக்குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This