பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

அநுராதபுரம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என நேற்று (11) அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக ஐந்து பொலிஸ் குழுக்களால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில், அனுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட அனைத்து சுகாதார ஊழியர்களும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This