மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 160 ரூபா சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மரக்கறிகளும் ஒரு கிலோ கிராம் 500 ரூபா முதல் 800 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.