உடல் ரீதியான தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்க கூடாது – வெளியானது அதிரடி அறிவிப்பு – சரோஜா போல்ராஜ்

உடல் ரீதியான தண்டனைகளை மாணவர்களுக்கு வழங்க கூடாது – வெளியானது அதிரடி அறிவிப்பு – சரோஜா போல்ராஜ்

மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகள் பொருத்தமில்லை என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

உடல் ரீதியான தண்டனை பெற்ற மாணவர்கள் வன்முறை, திருட்டு, பிழையான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆசிரியர்–மாணவர் இடையிலான தொடர்பில் விரிசல் ஏற்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தோல்வி மனநிலை உருவாகி எதிர்காலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இது வாய்ப்பு அளிக்கிறது. மாணவர்கள் பாடசாலைக்கு விருப்பத்துடன் செல்லாமல் தண்டனையைத் தவிர்க்க பயந்து செல்கின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை.

அதற்காக தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) கொண்டு மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாத விதமாக சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத் திருத்தம் மூலம் சிறுவர்கள் பணிக்கமர்த்தல், சிறுவர் திருமணம், கடத்தல், துஷ்பிரயோகம் போன்ற செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவர்.

கல்வி மற்றும் சுகாதார துறைகளில் கொள்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க அரசு முயற்சிசெய்து வருகின்றது என்றும் அவர் கூறினால்.

Share This